பாபநாசம் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை பணிக்கு மின்கலன் பேட்டரி வாகனம்
- பாபநாசம் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை பணிக்கு மின்கலம் மூலம் இயங்கும் பேட்டரி வாகனம் துவக்க விழா நடந்தது.
- பாபநாசம் பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன் தலைமை வகித்தார்.
பாபநாசம்:
பாபநாசம் பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மை பணிக்கு மின்கலம் மூலம் இயங்கும் பேட்டரி வாகனம் துவக்க விழா நடைபெற்றது.
பாபநாசம் பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர்கள் கோவி.அய்யாராசு, துரைமுருகன், பாபநாசம் பேரூர் செயலாளர் கபிலன், பாபநாசம் சட்டமன்ற உறுப்பினரின் நேர்முக உதவியாளர் முகமது ரிபாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன் வரவேற்றுப் பேசினார். விழாவில் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் முத்துச்செல்வன் கலந்துகொண்டு திடக்கழிவு மேலாண்மை பணிக்கு மின்கலம் மூலம் இயங்கும் பேட்டரி வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர்கள் தேன்மொழி உதயகுமார், முத்து மேரி மைக்கேல் ராஜ், ஜாஃபர் அலி, புஷ்பா சக்திவேல், கீர்த்தி வாசன், சமீரா பர்வீன், பிரேம்நாத் பைரன், பாலகிருஷ்ணன், பிரகாஷ், விஜயா, கஜலட்சுமி, கோட்டையம்மாள் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.