உள்ளூர் செய்திகள்

வெறிச்சோடி கிடக்கும் சந்தை

ஒட்டன்சத்திரம் சந்தையில் நுழைவுகட்டணம் அதிகரிப்பால் வர மறுக்கும் வியாபாரிகள்

Published On 2022-06-23 08:11 GMT   |   Update On 2022-06-23 08:11 GMT
  • ஒட்டன்சத்திரம் நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள சந்தையில் வாரந்தோறும் மாடு, கோழி, ஆடு போன்ற கால்நடை சந்தைகள் நடைபெறுகிறது.
  • கூடுதல் நுழைவு கட்டணம் வசூலிப்பதால் வியாபாரிகள் சந்தைக்கு வர மறுப்பதால் வெறிச்சோடி காணப்பட்டது.

ஒட்டன்சத்திரம்:

ஒட்டன்சத்திரம் நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள சந்தையில் வாரந்தோறும் திங்கட்கிழமை மாட்டு ச்சந்தை, செவ்வாய்கிழமை கோழிச்சந்தை, வியாழ க்கிழமை ஆட்டுச்சந்தை நடத்தப்பட்டு வருகிறது. இங்கு திண்டுக்கல் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில்இருந்து விவ சாயிகள் மற்றும் வியாபாரிகள் கால்நடை களை வாங்க வருவார்கள்.

கேரளாவை சேர்ந்த வியாபாரிகளும் வருகை தருவதுண்டு. ஆனால் கடந்த சில நாட்களாக இந்த சந்தைக்கு வியாபாரிகள் வருகை குறைந்து வருகிறது. குறிப்பாக இன்று நடந்த ஆட்டுச்சந்தையில் ஒரு சில வியாபாரிகள் மட்டுமே வந்ததால் வெறிச்சோடி காணப்பட்டது. காலை 5 மணிக்கு தொடங்கும் சந்தை 10 மணிவரை நடைெபறும். ஆனால் ஒரு மணிநேரத்திலேயே வந்திருந்த ஒரு சில வியாபாரிகளும் ஏமாற்ற த்துடன் திரும்பிச்சென்றனர்.

இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில், சந்தைக்கு கால்நடைகளை கொண்டுவர நுழைவுகட்ட ணமாக கூடுதல் தொகை வசூலிக்கப்படுகிறது. நகராட்சி சார்பில் ரூ.10 கட்டணம் நிர்ணயித்து ள்ள நிலையில் ரூ.20 வசூலிக்கப்படு கிறது. மேலும் உள்ளே வருவத ற்கும், வெளியே கொண்டு செல்வதற்கும் 2 முறை கட்டணங்கள் வசூலிக்கின்றனர். ஆனால் பழனி அருகில் உள்ள கொங்குகன்னிவாடி சந்தையில் ரூ.10 கட்டணம் முறையாக வசூலிக்கப்படுகிறது.

இதனால் பெரும்பாலான வியாபாரிகள் அங்கு சென்றுவிடுகின்றனர். இதேநிலை தொடர்ந்தால் இங்குள்ள சந்தைக்கு வியா பாரிகள் மற்றும் விவசாயிகள் கால்நடைகளை கொண்டு வருவதை முற்றிலும் தவிர்க்கும் நிலை உருவாகும். எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுத்து நிறுத்தவேண்டும் என்றனர்.

Tags:    

Similar News