உள்ளூர் செய்திகள்

தொழில்முனைவோர் மேம்பாட்டு முகாம் நடைபெற்றது.

தொழில் முனைவோர் மேம்பாட்டு முகாம்

Published On 2022-10-14 09:17 GMT   |   Update On 2022-10-14 09:17 GMT
  • தொழில் வாய்ப்புகள், தொடங்கும் முறைகள் அரசின் உதவிகள் மற்றும் புத்தாக்க அறிவினை தூண்டும் விதமாக எடுத்துரைத்தார்.
  • 50-க்கும் மேற்பட்ட கல்லூரி தொழில் முனைவோர் மாணவத்தலைவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

தஞ்சாவூர்:

தமிழ்நாடு அரசு தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் மண்டல மையமான அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி, மற்றும் பாரத் இன்ஸ்டிடியூட் ஆப் கேட்டரிங் டெக்னாலஜி அண்ட் ஹோட்டல் மேனேஜ்மென்ட் ஆகியோர் இணைந்து நடத்தும் 2 நாள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம் பாரத் கேட்டரிங் கல்லூரியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர்தமிழ்செல்வம் மற்றும் மைய ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் ஆகியோர் ஏற்பாட்டில் பாரத் கல்விக் குழும செயலாளர் புனிதா கணேசன் முன்னிலையில் கல்லூரி முதல்வர்முத்துக்கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

கள ஒருங்கிணைப்பாளர் அமர்நாத் வரவேற்புரை கூறினார். சிறப்பு விருந்தினராக சென்னையிலிருந்து டாக்டர் ரோசி பெர்னான்டஸ் கலந்து கொண்டு மாணவர்களிடம் பல்வேறு தொழில் வாய்ப்புகள், தொடங்கும் முறைகள் அரசின் உதவிகள் மற்றும் புத்தாக்க அறிவினை தூண்டும் விதமாக எடுத்துரைத்தார்.

நிகழ்ச்சியின் இறுதியில் துணை முதல்வர்கவிதா நன்றி கூறினார். நிகழ்ச்சியினை துணை போராசியரியர்சாண்டினா தொகுத்து வழங்கினார். 9 மாவட்டங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கல்லூரி தொழில் முனைவோர் மாணவத்தலைவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Tags:    

Similar News