உள்ளூர் செய்திகள்

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி

Published On 2022-06-05 10:20 GMT   |   Update On 2022-06-05 10:20 GMT
  • மாணவர்கள் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மெளன நாடகத்தை அரங்கேற்றினர்.
  • மாணவ மாணவிகள் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

திருப்பூர்:

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் அலகு -2 மற்றும் திருப்பூர் ரெயில் நிலையம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது. முன்னதாக அலகு -2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்று பேசினார்.

சிறப்பு விருந்தினராக உதவி நிலைய மேலாளர் (வணிகம்) சங்கர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், இன்றைய சூழலில் சுற்றுப்புறத்தை அனைவரும் காக்க வேண்டும், சுற்றுப்புறம் தூய்மையாக இருந்தால் நோய் இல்லாமல் நாம் வாழமுடியும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் மரம் நடவு செய்வதை ஊக்குவிக்க வேண்டும். பல உயிரினங்களுக்கு வாழ்க்கை தரும் மரங்களை வெட்டக்கூடாது. நடவு செய்த மரங்களை பராமரிக்க தவறக்கூடாது என்றார்.

முதன்மை வணிக ஆய்வாளர் இளங்கோ, சேலம் ெரயில்வே கோட்ட பயனாளர்கள் அறிவுரை குழு உறுப்பினர் சுரேஷ்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பிறகு மாணவர்கள் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மெளன நாடகத்தை அரங்கேற்றினர். பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்தோடு கண்டுகளித்தனர். மாணவ செயலர்கள் அருண்குமார், பாலசுப்பிரமணியன் தலைமையில் மாணவ மாணவிகள் தூய்மை பணியில் ஈடுபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

Tags:    

Similar News