உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடியில் மீனவர்களுக்கு உபகரண பொருட்கள்-அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்

Published On 2023-08-04 08:45 GMT   |   Update On 2023-08-04 08:45 GMT
  • மக்கள் குறை கேட்பு நிகழ்ச்சியில் மீனவ பெண்கள் வியாபாரம் செய்ய உபகரணங்கள் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
  • அமைச்சர் கீதாஜீவன் ரூ.1 லட்சம் மதிப்பீல் 10 மீனவர்களுக்கு உபகரணங்களை வழங்கினார்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒவ்வொரு வார்டாக பொதுமக்களை சந்தித்து அமைச்சர் கீதாஜீவன் குறைகளை கேட்டறிந்து அதிகாரிகளுடன் இணைந்து அதை நிவர்த்தி செய்து வருகிறார்.

திரேஸ்புரம் பகுதியில் நடைபெற்ற மக்கள் குறை கேட்பு நிகழ்ச்சியில் மீனவ சமுதாயத்தை சேர்ந்த பெண்கள் வியாபாரம் செய்வதற்கு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து எட்டையாபுரம் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட தி.மு.க. கலைஞர் அரங்கில் மீனவர்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் திரேஸ்புரம் அண்ணா காலனியில் உள்ள மீனவ பெண்களுக்கு ரூ. 1 லட்சம் மதிப்பீல் 10 மீனவர்களுக்கு பெரிய அலுமினிய டப்பு, அலுமினிய பேஷன், குளிர்பதனம் செய்வதற்கு பெரிய பிளாஸ்டிக் பதப்படுத்தும் டப்பா உள்ளிட்ட 3 வகையான உபகரணங்களை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.

நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், பகுதி செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தர், துணை அமைப்பாளர் ரவி, பகுதி பொருளாளர் உலகநாதன் மற்றும் கருணா, மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News