- கருங்கல்பாளையத்தில் பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
- அவர்களிடமிருந்து சீட்டுக் கட்டுகள், ரூ.6.550 ரொக்கப் பணம், 3 மோட்டார் சைக்கிள்கள், மற்றும் 5 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு கருங்கல்பாளை யம் சப்-இன்ஸ்பெக்டர் ராம்பிரபு தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போது 5 பேர் கொண்ட கும்பல் பணம் வைத்து சூதாடிய கொண்டிருந்தது தெரியவந்தது.
போலீசை பார்த்ததும் அந்த கும்பல் தப்பியோட முயன்றது. அந்த கும்பலை போலீசார் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் கிருஷ்ணம் பாளையம் பகுதியைச் சேர்ந்த கண்ணன் (58), கருங்கல்பாளையம் காவிரி ரோட்டை சேர்ந்த சிவா என்கிற சிவகுமார்(49), கிருஷ்ணம் பாளையம் பகுதியைச் சேர்ந்த செல்வன் (49), கருங்கல்பாளையம் பச்சையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த விஜய குமார்(44), கருங்கல்பாளை யம் கமலா நகரைச் சேர்ந்த முருகேசன்(51) ஆகியோர் என தெரியவந்தது. அவர்களிடமிருந்து சீட்டுக் கட்டுகள், ரூ.6.550 ரொக்கப் பணம், 3 மோட்டார் சைக்கிள்கள், மற்றும் 5 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்து அவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.