உள்ளூர் செய்திகள்

அதிக ஒலி எழுப்பிய 13 பஸ்களுக்கு அபராதம் விதிப்பு

Published On 2023-11-02 09:18 GMT   |   Update On 2023-11-02 09:18 GMT
  • போக்குவரத்து அலுவலர்கள் ஈரோடு பஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
  • கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி கள் எச்சரிக்கை விடுத்தனர்.

ஈரோடு:

போக்குவரத்து ஆணை யர் மற்றும் ஈரோடு கலெ க்டர் உத்தரவின் பேரில். துணை போக்கு வரத்து ஆணையர் வழிகாட்டுதலின் படி, ஈரோடு கிழக்கு மற்றும் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலர்கள் வெங்கட்டரமணி, பதுவை நாதன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சிவக்குமார், சுரேந்திரக்குமார் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு துறை சுற்றுச்சூழல் விஞ்ஞானி அருண்குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஈரோடு மத்திய பஸ் நிலையத்தில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன், கண் கூசும் முகப்பு விளக்குகள், ஆடியோ, வீடியோ சாதனங்கள் பொருத்தப்பட்டிருப்பது குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின்போது சுமார் 45 பஸ்களில் ஏர் ஹாரன் அகற்றப்பட்டது. பஸ் நிலையத்திற்குள் அதிக ஒலி எழுப்பிய 13 பஸ்களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கி அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் இதுபோன்று அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன், கண் கூசும் முகப்பு விளக்கு கள், ஆடியோ, வீடியோ சாதனங்கள் பொருத்தப்பட்டிருப்பின் அனுமதிச்சீட்டின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி கள் எச்சரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News