உள்ளூர் செய்திகள்

கேரளாவுக்கு சரக்கு வேனில் கொண்டு சென்ற 16 மாடுகள் பறிமுதல்

Published On 2022-07-27 09:56 GMT   |   Update On 2022-07-27 09:56 GMT
  • கர்நாடக மாநிலத்தில் இருந்து கேரளாவுக்கு 16 மாடுகளை ஏற்றிகொண்டு சரக்கு வேன் தடை செய்யப்பட்ட சோதனைச் சாவடியை கடந்து சென்றுள்ளது.
  • இது குறித்து தாளவாடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தாளவாடி:

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.தாளவாடியில் இருந்து தலமலை வழியாக சத்தியமங்கலம் செல்லும் சாலை அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. இச்சாலையில் உள்ளூர் மக்கள் மட்டுமே சென்றுவர அனுமதி உள்ளது.

உள்ளூர் கிராம மக்கள் தவிர வேறு வாகனங்கள் செல்ல வனத்துறையால் தடை செய்யப்பட்டுள்ளது. இதற்காக மகாராஜன்புரம் மற்றும் தலமலை ,திம்பம் பகுதியில் வனத்துறையினர் 3 சோதனைசாவடி அமைத்துள்ளனர். வாகனங்கள் சோதனைக்கு பின்னே அனுமதிக்கப்படும்.

இந்தநிலையில் நேற்று மாலை கர்நாடக மாநிலத்தில் இருந்து கேரளாவுக்கு 16 மாடுகளை ஏற்றிகொண்டு சரக்கு வேன் தடை செய்யப்பட்ட சோதனைச் சாவடியை கடந்து சென்றுள்ளது. இந்த சோதனைச் சாவடி அதிகாரிகளும் கண்டும் காணாமல் இருந்துள்ளனர்.

இந்நிலையில் இது பற்றி ஆசனூர் வனகோட்ட புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவேந்திர குமார் மீனாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் தடை செய்யப்பட்ட வனச்சாலையில் மாடுகளை ஏற்றி சென்ற சரக்கு வேனை பறிமுதல் செய்ய வனத்துறை அதிகாரிக்கு உத்தரவிட்டார்.

அதன் பேரில் தலமலை வனச்சரகர் சதீஷ் (பொறுப்பு) சம்பவ இடத்துக்கு சென்று தடை செய்யப்பட்ட வனச்சாலையில் சென்ற சரக்கு வேனை மாடுகளுடன் பறிமுதல் செய்து தாளவாடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இது குறித்து தாளவாடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News