- வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொணடார்.
- இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு எல்லீஸ்பேட்டை ஏசுநாதர் கோவில் வீதியை சேர்ந்தவர் சாமிநாதன் (58). இவரது மனைவி எலிசபத் (52). இவர்களுக்கு திருமணமாகி 30 வருடம் ஆகிறது. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.
இந்நிலையில் கணவன்- மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. இதேப்போல் சம்பவத்தன்றும் சாமிநா தனுக்கும், எலிசபத்துக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த எலிசபெத் இனிமேல் நான் உங்களுடன் வாழ மாட்டேன் என்று கூறி தூங்க சென்று விட்டார். இந்நிலையில் சம்பவத்தன்று காலை சாமிநாதன் வாந்தி எடுத்துள்ளார். இதுகுறித்து எலிசபத் கேட்டபோது வீட்டை சுத்தம் செய்ய வைத்திருந்த டெட்டாலை எடுத்து குடித்து விட்டதாக சாமிநாதன் கூறினார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த எலிசபத் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சாமிநாதனை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் சாமிநாதன் மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சாமிநாதன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து காஞ்சி கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் மேட்டூர் பி.என்.பட்டி, சின்னகவுர் பகுதியை சேர்ந்தவர் சிவன் (54). கூலித்தொழிலாளி. இவரது மகன் ஜெயக்குமார். ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருணகிரிநாதர் தெருவில் வசித்து வருகிறார். சிவன் கடந்த 2 வருடங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சிவன் சென்னிமலையில் உள்ள தனது மகன் வீட்டிற்கு கடந்த 9-ந் தேதி வந்து தங்கி இருந்தார். சம்பவத்தன்று மீண்டும் வயிற்று வலி அதிகமாக இருந்ததால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சிவன் மதுவில் விஷம் கலந்து குடித்து உள்ளார்.
போலீசார் விசாரணை
இது குறித்து அவர் தனது மகனிடம் கூறினார். இதனால் அதிர்ச்சடைந்த ஜெயக்குமார் தந்தையை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தார். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சிவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.