உள்ளூர் செய்திகள்

குடித்து விட்டு வாகனம் ஓட்டியவர்களுக்கு ரூ.10ஆயிரம் அபராதம்

Published On 2022-10-30 09:45 GMT   |   Update On 2022-10-30 09:45 GMT
  • ஈரோடு மாவட்டத்திலும் வாகன விதிமுறைகளை மீறுபவர்களுக்கு கூடுதல் அபராதம் விதிக்கும் பணி தொடங்கியது.
  • குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய 10 வாகன ஓட்டிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் என ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

ஈரோடு:

தமிழக முழுவதும் புதிய போக்குவரத்து விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதன்படி வாகன விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு கூடுதல் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

ஹெல்மெட் இல்லாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு முன்பு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது புதிய விதிமுறைப்படி ரூ.1000 விதிக்கப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர். தமிழகத்தில் விதிமுறைகள் மீறுபவர்களுக்கான கூடுதல் அபராதம் விதிக்கும் பணி தொடங்கியது.

ஈரோடு மாவட்டத்திலும் வாகன விதிமுறைகளை மீறுபவர்களுக்கு கூடுதல் அபராதம் விதிக்கும் பணி தொடங்கியது. மாவட்டத்தில் 4 நாட்களாக போக்குவரத்து போலீசார் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈரோடு பன்னீர்செல்வம் பார்க், மணிக்கூண்டு பகுதி, பஸ் நிலையம், ஜிஹெச் ரவுண்டானா, சூரம்பட்டி நால்ரோடு ,காளை மாட்டு சிலை, வீரப்பன்சத்திரம், கருங்கல்பாளையம் போன்ற பகுதிகளில் போலீசார் வாகன சோதனை ஈடுபட்டனர்.

குறிப்பாக ஹெல்மெட் அணியாமல் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று ஒரு நாளில் மட்டும் வாகன விதிமுறை மீறுபவர்கள், ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள், குடித்துவிட்டு வாகனம் ஓட்டியது, செல்போன் பேசி எப்படி வாகனம் ஓட்டியது என 130 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதில் பெரும்பாலும் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது. இதேப்போல் குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய 10 வாகன ஓட்டிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் என ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

ஈரோடு மாநகர் பகுதியில் மட்டும் நேற்று ஒரே நாளில் வாகன விதிமுறைகளை மீறிய 130 பேரிடமிருந்து ரூ.2 லட்சத்துக்கு மேல் அபராதம் வசூல் செய்யப்ப ட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இதேப்போல் கோபி செட்டிபாளையம், சத்திய மங்கலம், பெருந்துறை, பவானி, அந்தியூர், மொடக்குறிச்சி, கொடுமுடி என மாவட்டம் முழுவதும் அபராதம் விதிக்கும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News