உள்ளூர் செய்திகள்

பத்ரகாளியம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டத்தில் புகுந்த குதிரை

Published On 2023-06-14 07:51 GMT   |   Update On 2023-06-14 07:51 GMT
  • குதிரை பக்தர்களின் கூட்டத்திற்குள் புகுந்தது.
  • பக்தர்கள் அலறியடித்து கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர்.

அந்தியூர்:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பஸ் நிலையம் அருகே புகழ் பெற்ற பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் பக்தர்கள் பலர் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் இன்று 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்பட்டது. இதையொட்டி பொதுமக்கள் பலர் தங்கள் குழந்தைகளை அழைத்து கொண்டு இன்று காலை அந்தியூர் பத்ர காளியம்மன் கோவிலுக்கு வந்து அம்மனை வழி பட்டனர்.

இதனால் காலை வேளையில் கோவிலுக்கு பக்தர்கள் அதிக அளவில் வந்திருந்தனர்.

அப்போது கோவிலுக்குள் ஒரு குதிரை திடீரென கோவிலுக்குள் புகுந்தது. கோவிலில் பக்தர்கள் அதிக அளவில் இருந்தனர். இதையடுத்து அந்த குதிரை பக்தர்களின் கூட்டத்திற்குள் புகுந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் அலறியடித்து கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர்.

இதையடுத்து கோவில் பணியாளர்கள் குதிரையை கோவில் இருந்து வெளியே விரட்டும் பணியில் ஈடு பட்டனர். ஆனால் அந்த குதிரை கோவில் வளாக த்திலேயே நின்று கொண்டு இருந்தது.

இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஒரு வித அச்ச உணர்வோடு உள்ளே சென்று சாமி தரிசனம் செய்தனர். இதை தொடர்ந்து சிறுது நேரத்துக்கு பிறகு அந்த குதிரை கோவில் வளாகத்தில் இருந்து வெளி யே சென்றது.

இதனால் இன்று காலை அந்தியூர் பகுதியில் பரபரப்பு நிலவியது.

இது குறித்து பொதுமக்கள் கூறும் போது அந்தியூர் பகுதியில் ஏராளமான குதிரைகள் சுற்றி திரிகிறது. மேலும் குதிரை ரோடுகளில் போக்குவரத்து இடையூறும் ஏற்படும் வகையில் உள்ளது. தற்போது கோவிலில் புகுந்து பக்தர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. எனவே அந்தியூர் பகுதியில் சுற்றி திரியும் குதிரைகளை அப்புற ப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.

Tags:    

Similar News