பாம்பு கடித்து விவசாய கூலி தொழிலாளி சாவு
- ராஜேந்திரனின் வலது கால் முட்டியில் பின்புறம் கட்டுவிரியன் பாம்பு கடித்துவிட்டது.
- சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
ஈரோடு:
தர்மபுரி மாவட்டம் மோனாசி அடுத்த அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (51). இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
கணவன்-மனைவி இரு வரும் விவசாய கூலி வேலை பார்த்து வந்தனர். ராஜேந்தி ரன் மற்றும் சாந்தி வெளியூர்க ளுக்கு சென்று தங்கி நெல் நாத்து நடவு வேலையும் செய்து வந்தனர். இதற்காக அவர்கள் பல்வேறு ஊர்களுக்கு சென்று தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர்.
இதேபோல் ராஜேந்திரன், சாந்தி மற்றும் அதே ஊரை சேர்ந்த 20 பேர் ஈரோடு மாவட்டம் சித்தோடு அடுத்த கங்காபுரம் அருகே உள்ள கொளத்துபாளையத்தை சேர்ந்த சண்முகம் என்ப வருக்கு சொந்தமான விவசாய பூமியில் நெல் நாற்று நடவு வேலை செய்து அங்கேயே தங்கி இருந்தனர்.
சம்பவத்தன்று இரவு கொளத்துபாளையத்தை சேர்ந்த சண்முகம் என்பவரு க்கு சொந்தமான குடோன் முன்புற கார வாசலில் ராஜேந்திரன், சாந்தி உள்பட அனைவரும் படுத்து தூங்கி கொண்டி ருந்தனர்.
நள்ளி ரவு 1 மணி அளவில் கார வாசலில் படுத்து தூங்கி கொண்டி ருந்த ராஜேந்திரனின் வலது கால் முட்டியில் பின்புறம் கட்டுவிரியன் பாம்பு கடித்துவிட்டது.
இதனால் வலியால் துடித்த அவரை கார் மூலம் சிகிச்சை க்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர். அங்கு உள்நோ யாளியாக சிகிச்சையாக சிகி ச்சை பெற்று வந்த ராஜேந்திரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.