ஆடி கிருத்திகை விழா; முருகன் கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம்
- முருக பெருமானுக்கு பால், இளநீர் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
- இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சென்னிமலை முருகப்பெருமானை வணங்கி சென்றனர்.
சென்னிமலை:
முருகனுக்கு உகந்த விரதங்களுள் ஆடிக்கிரு த்திகை விரதம் மிகவும் முக்கியமானது. இந்த நாளில் பக்தர்கள் முருகனை விரதமிருந்து வணங்கி தங்களின் விரதத்தை பூர்த்தி செய்வார்கள்.
ஆடிக்கிருத்திகையில் விரதம் இருந்து முருகனை வழிபடுவதால் வேண்டிய வரங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஆடி கிருத்திகையையொட்டி சென்னி மலை முருகன் கோவிலில் இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. இதை தொடர்ந்து முருக பெருமானுக்கு பால், இளநீர் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சென்னிமலை முருகப்பெருமானை வணங்கி சென்றனர்.
இதேபோல் கோபிசெட்டி பாளையம் அடுத்த பவள மலை முத்துகுமாரசாமி கோவிலில் ஆடி கிருத்திகை யை யொட்டி இன்று காலை சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப் பட்டு இருந்தது.
இதையொட்டி கோவிலில் திருப்படி பூஜை நடந்தது. இதில் படியில் தேங்காய் உடைத்து சூடம் ஏற்றி வழிபாடு நடந்தது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் பச்சைமலை சுப்பிரமணியசாமி கோவில், கோபி அருள்மலை முருகன், மூல வாய்க்கால் முருகன், அம்மா பேட்டை ஈஸ்வரன் கோவில் வளாகத்தில் உள்ள முருகன் கோவில் உள்பட அனைத்து முருகன் கோவில் களிலும் இன்று காலை ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்.