பகவதி அம்மன் கோவில் பூட்டை உடைத்து உண்டியல் கொள்ளை
- பவானிசாகர் கோடேபாளையம் பகுதியில் பிரசித்தி பெற்ற மலையாள பகவதி அம்மன் கோவில் உள்ளது.
- கோவிலில் இருந்த உண்டியல் பெயர்த்து எடுக்கப்பட்டு கோவிலுக்கு பின்னால் கிடப்பது தெரியவந்தது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் கோடேபாளையம் பகுதியில் பிரசித்தி பெற்ற மலையாள பகவதி அம்மன் கோவில் உள்ளது.
சம்பவத்தன்று இரவு கோவிலில் பூைஜகள் முடிந்ததும் பூசாரி வழக்கம்போல் கோவிலை பூட்டி சென்றார். நள்ளிரவில் கோவிலுக்கு வந்த மர்ம நபர்கள் கோவில் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். பின்னர் அவர்கள் கோவிலில் இருந்த உண்டியலை பெயர்த்து எடுத்தனர்.
தொடர்ந்து அவர்கள் உண்டியலை கோவிலுக்கு பின் பகுதிக்கு கொண்டு சென்று உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
காலையில் கோவில் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியை சேர்ந்த ெபாதுமக்கள் இது குறித்து பவானிசாகர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது கோவிலில் இருந்த உண்டியல் பெயர்த்து எடுக்கப்பட்டு கோவிலுக்கு பின்னால் கிடப்பது தெரியவந்தது. மேலும் உண்டியலில் சுமார் ரு. 5 ஆயிரம் பணம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக பவானிசாகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.