உள்ளூர் செய்திகள்

ஈரோடு ஜவுளி சந்தையில் வியாபாரம் பாதிப்பு

Published On 2022-12-13 09:20 GMT   |   Update On 2022-12-13 09:20 GMT
  • மொத்த வியாபாரிகள் குறைந்த அளவே வந்ததாக ஜவுளி சந்தை வியாபாரிகள் கூறினர்.
  • குளிர்கால ஆடைகள், பேர்வை உள்ளிட்டவைகள் விற்பனை அதிக அளவில் காணப்பட்டது.

ஈரோடு:

ஈரோடு ஜவுளி சந்தையானது வாரந்தோறும் செவ்வாய்கிழமை நடை பெறுவது வழக்கமாகும். கடந்த 2 வாரங்களாக கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஜவுளி வியாபாரம் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் கடந்த ஒரு வாரகாலமாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக இன்று நடைபெற்ற ஜவுளி சந்தையில் வியாபாரம் பாதிக்கப்பட்டது.

குறிப்பாக வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வர வேண்டிய மொத்த வியாபாரிகள் குறைந்த அளவே வந்ததாக ஜவுளி சந்தை வியாபாரிகள் கூறினர்.

இது குறித்து ஜவுளி சந்தை வியாபாரிகள் கூறியதாவது:

கிறிஸ்துமஸ், புத்தாண்டு சீசன் விற்பனை கடந்த 2 வாரங்களாக நடைபெற்று வந்தது. வெளிமாநில ஆர்டர்கள் ஓரளவு கை கொடுத்தது. இந்தநிலையில் இந்த வாரம் நடைபெற்ற சந்தைக்கு வியாபாரிகள் எதிர்பார்த்த அளவு வரவில்லை.

குறிப்பாக வெளிமாநில, மாவட்ட மொத்த வியாபாரிகள் வருகை குறைவாக இருந்தது. சில்லரை விற்பனை மட்டுமே ஓரளவு நடைபெற்றது.

குளிர்கால ஆடைகள், பேர்வை உள்ளிட்டவைகள் விற்பனை அதிக அளவில் காணப்பட்டது. இதேநிலையில் மழை நீடித்தால் கிறிஸ்துமஸ், புத்தாண்டு சீசன் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுவிடும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News