உள்ளூர் செய்திகள்

பழைய இரும்பு பொருட்களை திருடியதாக 7 பேர் மீது வழக்கு

Published On 2023-11-24 07:48 GMT   |   Update On 2023-11-24 07:48 GMT
  • ரூ.2 லட்சம் மதிப்பிலான 5 டன் பழைய இரும்பு பொருள்களை காணவில்லை.
  • 7 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு:

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை, செங்காடு பகுதியை சேர்ந்தவர் சுசீந்திரன் (26). இவர் ஈரோடு, பெருந்துறை ரோட்டில் உள்ள பிரபல தனியார் கட்டுமான நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார்.

அந்த கட்டுமான நிறுவ னத்துக்கு சொந்தமான இரு ம்பு பொருள்கள், பெயிண்ட் டிரம்கள் என 5 டன் எடையிலான பழைய இரும்பு பொருள்கள் நிறுவனத்தின் கிடங்கில் போட்டு வைக்கப்ப ட்டிருந்தன.

அந்த கிடங்கில் ராஜேஷ் என்பவர் வாட்ச்மேனாக வேலை பார்த்து வந்தார். இந்த பழைய இரும்பு பொருள்களை அலாவுதீன்பாஷா என்பவர் வாங்கி செல்வது வழக்கம்.

இந்த நிலையில் கட்டுமான நிறுவனத்தின் மேற்பார்வை யாளர் சுசீந்திரன் கடந்த 16-ந் தேதி கிடங்குக்கு சென்று பார்த்தபோது அங்கு வைக்க ப்பட்டிருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான 5 டன் பழைய இரும்பு பொருள்களை காணவில்லை.

விசாரணையில் பழைய இரும்பு பொருள்களை வாங்கிச் செல்லும் அலாவூதீன் பாஷா மற்றும் வாட்ச்மேன் ராஜேஷ் மற்றும் 5 பேர் கொ ண்ட கும்பல் ஒரு வேனில் 5 டன் பழைய இரும்பு பொருள்களை எடுத்து சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து சுசீந்திரன் வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து அலா வுதீன்பாஷா, ராஜேஷ் மற்றும் இரும்பு பொரு ள்களை திருடி சென்ற 5 பேர் என 7 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News