உள்ளூர் செய்திகள்

நீர்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு

Published On 2023-07-09 08:05 GMT   |   Update On 2023-07-09 08:05 GMT
  • புதிதாக கான்கிரீட் கரைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
  • இந்த பணிகளை நீர்வளத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ஈரோடு:

கீழ்பவானி வாய்க்காலில் பல்வேறு இடங்களில் சேதம் அடைந்த பகுதி சீரமைக்கப்பட்டு வருகிறது.

அதன்படி கொடுமுடி அருகே வடுகனூரில் செல்லும் கீழ்பவானி வாய்க்காலில் போடப்பட்டிருந்த கான்கிரீட் கரைகள் உடைந்து சிதிலமடைந்தன.

இதை சீரமைத்து கொடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து அங்கு புதிதாக கான்கிரீட் கரைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்த பணிகளை நீர்வளத்துறை கோவை மண்டல தலைமை பொறியாளர் சிவலிங்கம், ஈரோடு கண்காணிப்பு பொறியாளர் மன்மதன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது அந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகளை அதிகாரிகள் சந்தித்து அவர்களிடம் குறைகள் கேட்டறிந்தனர். அவர்களின் குறைகள் நிறைவேற்றி கொடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

இந்த ஆய்வின்போது செயற்பொறியாளர் திருமூர்த்தி, உதவி செயற்பொறியாளர் ஜெயபிரகாஷ், உதவி பொறியாளர் ஜெகதீஷ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News