உள்ளூர் செய்திகள்

கொண்டத்து காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

Published On 2023-04-25 09:39 GMT   |   Update On 2023-04-25 09:39 GMT
  • விநாயகர் பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொட ங்கியது.
  • விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா கும்பாபிஷேகம் நாளை நடைபெற உள்ளது.

கோபி:

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ளது பிரசித்தி பெற்ற பாரியூர் கொண்ட த்து காளியம்மன் கோவில் மற்றும் அமரபணீஸ்வரர் கோவிலில் கடந்த சில மாதங்களாக புணர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.

இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி (வெள்ளிக்கிழமை) விநாயகர் பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொட ங்கியது. அதைத்தொடர்ந்து 22-ந் தேதி கலசாபிஷே கமும், வாஸ்து சாந்தியும் நடைபெ ற்றன.

23-ந் தேதி யாக சாலையில் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், முதற்கால யாகமும் மகா தீபாரா தனையும் நடைபெற்றன. நேற்று 2-ம் கால யாக பூஜையும், மகா தீபாரா தனையும் நடைபெற்றது.

தொடர்ந்து இன்று 4-ம் காலயாக பூஜையும், மகா தீபாராதனையும் நடை பெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா கும்பாபிஷேகம் நாளை காலை 10 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நடைபெற உள்ளது.

முன்னதாக காலை 8 மணி அளவில் கலசங்கள் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற உள்ளன. பகல் 1 மணிக்கு கோமாதா பூஜையும், தசதானம், தச தரிசனம், மகா அபிஷேகம், மகா அலங்கார பூஜை நடைபெற உள்ளது.

மாலை 6 மணி அளவில் அம்மன் மற்றும் பஞ்சமூர்த்தி புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதையொட்டி கோவில் அருகில் அமைக்கப்ப ட்டுள்ள பிரம்மாண்டமான பந்தலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது.

Tags:    

Similar News