16 -ந் தேதி முதல் தொழு நோய் கண்டறியும் முகாம்
- ஈரோடு மாவட்டத்தில் கடந்த, 2019–-20ல், 12-க்கும் மேற்பட்ட புதிய தொழுநோயாளிகள் கண்டுபிடிக்கப்ப ட்டுள்ளனர்.
- ஈரோடு மாநகராட்சி , கோபி நகராட்சி பகுதியில் தீவிர தொழுநோய் கண்டுபிடிக்கும் முகாம் வரும், 16 முதல் செப்டம்பர் 3-ந் வரை நடக்க உள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த, 2019–-20ல், 12-க்கும் மேற்பட்ட புதிய தொழுநோயாளிகள் கண்டுபிடிக்கப்ப ட்டுள்ளனர். அவ்வாறு கண்டறியப்பட்ட தாளவாடி, சிவகிரி, மொடக்குறிச்சி, சென்னிமலை, அம்மாபேட்டை, அந்தியூர், டி.என்.பாளையம், கோபி, பவானி, நம்பியூர் ஆகிய 10 யூனியன்,
ஈரோடு மாநகராட்சி , கோபி நகராட்சி பகுதியில் தீவிர தொழுநோய் கண்டுபிடிக்கும் முகாம் வரும், 16 முதல் செப்டம்பர் 3-ந் வரை நடக்க உள்ளது.
இப்பணியில், 1,322 முன் களப்பணியாளர்கள் ஈடுபடுகின்றனர். இவர்கள் வீடு,வீடாக சென்று ஆண்களை ஆண் களப்பணியாளரும், பெண்களை பெண் களப்பணியாளரும் பரிசோதனை செய்ய உள்ளனர்.
ஆரம்ப அறிகுறியாக தோலில் சிவந்த அல்லது வெளிறிய உணர்ச்சியற்ற தேமல், கை மற்றும் கால்களில் மதமதப்பு, சூடு, குளிர்ந்த உணர்வு தெரியாமை, நீண்ட நாட்களாக ஆறாத புண், காது மடல் தடித்திருத்தல், புருவமுடி இல்லாமல் இருத்தல், உடலில் முடிச்சு, முடிச்சாக காணப்படுதல் உடனடியாக பரிசோதி க்கப்பட வேண்டும்.
இதற்காக, அனைத்து அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவ கல்லுாரி மருத்துவனைகளியலும் பரிசோதனை மேற்கெ ாள்ளப்படுகிறது. நோயின் தன்மைக்கு ஏற்ப ஆறு முதல், ஒரு ஆண்டுக்குள் முழுமையான சிகிச்சை பெறலாம்.
இதனை கண்ட றிவதால், ஊனத்தை தடுக்கலாம். புதிதாக கண்டுபிடிக்கப்படும் தொழுநோயாளிகளின் உடனிருப்போர், அருகில் வசிப்போர், உடன் பணி புரிவோருக்கும் தொழுநோய் தடுப்பு மருந்து வழங்கப்படும். மற்றவர்களுக்கு பரவுவது தடுக்கப்படும். இந்தத் தகவலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.