வேனில் ரேஷன் அரிசியை கடத்தியவர் கைது
- சத்தியமங்கலம் அருகே மூலக்கிணறு பகுதியில் போலீசார் வாகன சோதனை ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
- வேனை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் ரேஷன் அரிசி மூட்டை மூட்டையாக இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு கொடுமை பொருள் குற்றப்புலனாய்வு போலீஸ் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் உத்தரவின் பெயரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சந்தி ரசேகர் தலைமையிலான போலீசார் சத்தியமங்கலம் அருகே மூலக்கிணறு பகுதியில் வாகன சோதனை ஈடுபட்டுக் கொண்டிரு ந்தனர்.
அப்போது அந்த வழியாக ஆம்னி வேன் ஒன்று வந்தது. அந்த வேனை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் ரேஷன் அரிசி மூட்டை மூட்டையாக இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதை அடுத்து வேனை ஒட்டி வந்த நபரிடம் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர் பவானி பழனிபுரத்தை சேர்ந்த தனபால் (45) என்பதும், பெருந்துறையில் தங்கி உள்ள வட மாநில த்தவர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக ரேஷன் அரிசியை கடத்தி வந்ததை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து தனபாலை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் அவரிடம் இருந்து 1,450 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வேனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.