விவசாயிகளுக்கு காளான் வளர்ப்பு தொழில்நுட்ப பயிற்சி
- வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலம் தலா 40 விவசாயிகளுக்கு காளான் வளர்ப்பு தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது.
- காளான் வளர்ப்பு தொழில்நுட்பம் விற்பனை விபரங்கள் மற்றும் காளான் உணவில் உள்ள மருத்துவ குணங்கள் போன்ற விபரங்களை தெளிவாக கூறப்பட்டது.
கொடுமுடி:
கொடுமுடி வட்டாரத்தில் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருகிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் மூலம் கொளத்துப்பாளையம் கிராமத்தை சேர்ந்த பெரும்மாம்பாளையம் கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலம் தலா 40 விவசாயிகளுக்கு காளான் வளர்ப்பு தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது.
வேளாண்மை உதவி இயக்குநர் யசோதா தலைமையில் நடைபெற்றது. சிவகிரி கோவில்பாளையத்தில் செயல்பட்டு வரும் காளான் பண்ணையின் உரிமையாளர் இளங்கோ காளான் வளர்ப்பு தொழில்நுட்பம் விற்பனை விபரங்கள் மற்றும் காளான் உணவில் உள்ள மருத்துவ குணங்கள் போன்ற விபரங்களை தெளிவாக கூறினார்.
விதை சான்று மற்றும் அங்கக சான்று துறையின் மூலம் விதை சான்று அலுவலர் ஹேமாவதி கலந்துக்கொண்டு அங்கக வேளாண்மை மற்றும் அங்கக சான்றுகள்வழங்கும் முறைகள் பற்றிய விபரங்களை தெளிவாக எடுத்துரைத்தார்.
வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக துறையின் சார்பாக உதவி வேளாண்மை அலுவலர் அரவிந்த் கலந்து கொண்டு உழவர் சந்தை செயல்படும் முறைகள் உழவர் சந்தை அட்டைகள் பெறப்படும் முறைகள் மற்றும் பாரத பிரதமர் உணவு பதப்படுத்தும் தொழில்கள் பற்றிய விபரங்களை தெளிவாக எடுத்துரைத்தார்.
உதவி வேளாண்மை அலுவலர் நாகராஜ் கலந்து கொண்டு துறையின் மானிய திட்டங்களை பற்றி விளக்கினர். தொழில்நுட்ப மேலாளர் கிருத்திகா கலந்து கொண்டு பயிற்சிக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்திருந்தார்.