ஈரோட்டில் பயிற்சி செவிலியர் மாணவி தூக்குபோட்டு தற்கொலை
- யசோதா அறையின் கழிவறைக்கு சென்று தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார்.
- பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
ஈரோடு:
திண்டுக்கல் மாவட்டம் பாப்பம்பட்டி எஸ்.கே.சி.நகர், 5-வது சாலையை சேர்ந்தவர் காளியப்பன் (54). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் திருமணம் ஆகி கணவருடன் வசித்து வருகிறார். இளைய மகள் யசோதா (19) மேற்கு குமரலிங்கத்தில் உள்ள கல்லூரியில் செவிலியர் பாடப்பிரிவில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
தற்போது ஒரு வருட பயிற்சிக்காக யசோதா ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பயிற்சி எடுத்து வந்தார். இதற்காக மருத்துவமனை அருகே உள்ள அறையில் வாடகைக்கு தங்கி இருந்து பயிற்சி மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில் சம்ப வத்தன்று யசோதா தான் தங்கி இருந்த அறையின் கழிவறைக்கு சென்று திடீ ரென தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார்.
அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே யசோதா இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து ஈரோடு அரசு தலைமை மருத்துவ மனை போலீசார் வழக்கு பதிவு செய்து யசோதா எந்த காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று விசா ரணை நடத்தி வருகின்றனர்.