ஆபத்தை உணராமல் காவிரி ஆற்றில் குளிக்கும் பொதுமக்கள்
- பவானி கூடுதுறை அருேக உள்ள அய்யப்பா சேவா மண்டபம் படித்துறை காவரி ஆற்றில் அதிகளவு தண்ணீர் செல்கிறது.
- மேலும் தண்ணீர் அதிகம் செல்வதால் பவானி பூ மார்க்கெட் வீதி அருகே உள்ள பழைய பாலம் பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
பவானி:
மேட்டூர் அணையில் இருந்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. இதையொட்டி பவானி காவிரி ஆற்றில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
இதனால் ஆற்றங் கரையோரம் உள்ள பொது மக்கள் பாது காப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் வெள்ளம் வடியாத தால் ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் ஆங்காங்கே உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் தண்ணீர் அதிகம் செல்வதால் பவானி பூ மார்க்கெட் வீதி அருகே உள்ள பழைய பாலம் பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
இதனால் நடந்து செல்லபவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர். இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம், மற்றும் சைக்கிள் ஆகியவை செல்ல அனுமதி இல்லை.
பவானி ஆற்றில் கடந்த வாரம் தண்ணீர் திறந்து விடப்பட்டு ஆகயத்தாமரை அதிகளவில் அடித்து வந்து தண்ணீர் செல்ல முடியாமல் இருந்தது. அதனை ஜே.சி.பி. எந்திரம் மூலம் அகற்றப்பட்டு தண்ணீர் செல்ல வழிவகை செய்யப்பட்டது.
இதனால் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. இதனால் காவிரி ஆற்றில் மக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் பவானி கூடுதுறை அருேக உள்ள அய்யப்பா சேவா மண்டபம் படித்துறை காவரி ஆற்றில் அதிகளவு தண்ணீர் செல்கிறது. ஆபத்தை உணராமல் பொதுமக்கள் சிலர் ஆற்றில் குளித்து வருகிறார்கள்.