உள்ளூர் செய்திகள்

ஜம்பை பேரூராட்சி பொதுமக்கள் சார்பில் பவானி தாசில்தாரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

பத்திரப்பதிவு தடையை நீக்க கோரி தாசில்தாரிடம் கோரிக்கை மனு

Published On 2023-04-20 09:04 GMT   |   Update On 2023-04-20 09:04 GMT
  • பத்திரப்பதிவு தடையை நீக்கிட வேண்டும் என வழியுறுத்தி கோரிக்கை மனு வழங்கினர்.
  • தாசில்தார் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளதார்.

பவானி:

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள ஜம்பை பேரூராட்சி பகுதி யில் பழைய புல எண்கள் பத்திரப்பதிவு தடை செய்யப்பட்டுள்ளதை நீக்க கோரி ஊர் பொது மக்கள் சார்பாக நில மீட்பு குழு அமைத்து 100-க்கும் மேற்பட்டோர் பவானி தாசில்தார் ரவிச்சந்திரனிடம் தங்கள் பகுதியில் வக்பு வாரியத்திற்கு சொந்தம் என பத்திர பதிவு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

இதனால் தங்கள் வாழ்வா தாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஜம்பையில் 20 ஏக்கர் நிலத்தில் 93 சென்ட் போக மீதி உள்ள நிலத்தின் பத்திரப்பதிவு தடையை நீக்கிட வேண்டும் என வழியுறுத்தி கோரிக்கை மனு வழங்கினர்.

இதனையடுத்து கோரி க்கை மனு பெற்று க்கொ ண்ட தாசில்தார் 3 மாதத்தில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து ள்ளதாக தெரிவித்தனர்.

தொடர்ந்து பவானி பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்று சார் பதிவாளரிடம் கோரி க்கை மனு ஒன்று வழங்கினர்.

Tags:    

Similar News