போச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு
- பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேச்சு போட்டி மாவட்ட கலெக்டர் அலுவலக அரங்கில் நடைபெற்றது.
- 86 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் முன்னாள் முதல்- அமைச்சர் டாக்டர்.கலைஞர் பிறந்தநாளை யொட்டி 7-ந் தேதி பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேச்சு போட்டி மாவட்ட கலெக்டர் அலுவலக 2-ம் தளக்கூட்ட அரங்கில் நடைபெற்றது.
பள்ளி மாணவர்க ளுக்கான பேச்சு போட்டிக்கு அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முது கலை தமிழாசிரியர் கந்த சாமி, நல்லாம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி முது கலை தமிழாசிரியர் குமரேசன்,
விஜயமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலைத் தமிழாசிரியர் கருப்புசாமி ஆகியோர் நடுவர்களாகப் பங்கேற்றனர். பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டியில் 86 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
உத்தண்டியூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவன் கோகுல்பிரசாத் முதல் பரிசு ரூ.5,000-ம், வலையபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி தமிழ்க்கனி 2-ம் பரிசு ரூ.3000-ம், கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலை ப்பள்ளி மாணவி இலக்கியா 3-ம் பரிசு ரூ.2000-ம் பெற்றுள்ளனர்.
மேலும் சிறப்பு பரிசாக ஆ.புதுப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் தேவபாலா ரூ.2000-ம், தவிட்டுப் பாளையம் அரசு உயர்நிலை ப்பள்ளி மாணவி ரிதனிகா ரூ.2000-ம் பெற்றுள்ளனர்.