உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிளில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

Published On 2023-10-06 09:09 GMT   |   Update On 2023-10-06 09:09 GMT
  • போலீசார் மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.
  • 3 சாக்கு மூட்டைகளில் 100 கிலோ அரிசி இருந்தது தெரியவந்தது.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் தாள வாடி மலைப்பகுதியில் உள்ள கிராமங்களில் பொது மக்களிடம் குறைந்த விலை க்கு ரேஷன் அரிசியை வாங்கி கடத்தி சென்று அருகாமையில் உள்ள கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது தொடர்கதை ஆகி வருகிறது.

இதனைதடுக்க தாளவாடி வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு தாளவாடி வருவாய் துறை அதிகாரிகள் தமிழக-கர்நாடகா எல்லையில் உள்ள ராமாபுரம் என்ற இடத்தில் வாகன சோதனை யில் ஈடுபட்டு கொண்டி ருந்தனர். அப்போது அந்த வழியே ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது.

போலீசார் அந்த மோட்டார் சைக்கிள் தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது அதில் இருந்த 3 சாக்கு மூட்டைகளில் 100 கிலோ அரிசி இருந்தது தெரியவந்தது. இந்த அரிசியை கர்நாடகாவுக்கு கொண்டு செல்ல முயன்றதும் தெரியவந்தது.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது அவர் தாளவாடி பகுதியை சேர்ந்த பாஷா பாய் (55) என தெரிய வந்தது. பின்னர் போலீசார் பாட்சா பாயை பிடித்து ஈரோடு உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிம் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News