பவானிசாகர் அணையில் இருந்து கீழ் மதகு வழியாக தண்ணீர் திறப்பு
- பவானிசாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது.
- இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியாக உள்ளது.
ஈரோடு:
பவானிசாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மீண்டும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.
இதையடுத்து அணையின் நீர்மட்டம் நேற்று மாலை 102 அடியை எட்டியது. அணையின் விதிப்படி 102 அடி எட்டியதும் அணையின் பாதுகாப்பு கருதி கீழ் மதகு வழியாக அணைக்கு வரும் நீர் அப்படியே பவானி ஆற்றுக்கு வெளி யேற்றப்பட்டு வருகிறது. இதனால் பவானி ஆற்றுக்க ரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 4300 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து அப்படியே 4,300 கன அடி நீர் உபரிநீராக பவானி ஆற்றுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பவானிசாகர், தொட்டம் பாளையம் , நடுப்பாளையம், சத்திய மங்கலம், அரியப்ப ம்பாளையம், சதுமுகை, பவானிசாகர் கூடுத்துறை வரை உள்ள ஆற்று கரையோர பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பொதுப்பணித்துறையினர் கண்காணிப்பு
இதனால் இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால் பொதுப்பணித்துறையினர் வருவாய்துறையினர் உஷார் படுத்தப்பட்டு நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.