- ஈரோடு மரப்பாலம் பகுதியில் நீர் வழி பாதையில் ஓடை அருகே 17 வீடுகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்டு இருந்தன.
- இந்நிலையில் இன்று ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றும் பணி நடந்தது.
ஈரோடு:
ஈரோடு மரப்பாலம் பகுதியில் நீர் வழி பாதையில் ஓடை அருகே 17 வீடுகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்டு இருந்தன. இந்த ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற உத்தரவிடப்பட்டது.
இதற்காக மாநகராட்சி சார்பில் சம்பந்தப்பட்ட வீடுகளை சேர்ந்தவர்களுக்கு ஏற்கனவே நோட்டீஸ் வழங்கப்பட்டு கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றும் பணி நடந்தது. மாநகராட்சி செயற்பொறியாளர் விஜயகுமார், உதவி செயற்பொறியாளர் சண்முகவடிவு, இளநிலை பொறியாளர் செந்தாமரை ஆகியோர் தலைமையில் மாநகராட்சி பணியாளர்கள் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டவுன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வீடுகளை இடிப்பதற்கு முன் வீடுகளை சேர்ந்தவர்கள் தங்களது உடைமைகளை எடுத்து சென்றனர். 5 பொக்லைன் எந்திரன் மூலம் வீடுகளை அகற்றும் பணி நடந்து வருகிறது.