தீபாவளியையொட்டி ரூ.2 கோடிக்கு ஆடு, கோழி, மாடுகள் விற்பனை
- தீபாவளி பண்டிகை வருவதால் நேற்று விற்பனைக்கு ஏராளமான ஆடு, கோழிகள், மாடுகள் கொண்டு வரப்பட்டது.
- இந்த வார சந்தையில் தீபாவளி யை யொட்டி ஆடு, கோழி, மாடுகள் ரூ.2 கோடி அளவுக்கு வியாபாரம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் பு.புளியம்பட்டியில் வாரந்தோறும் புதன்கிழமை அன்று ஆடு, கோழி, மாட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தை தமிழகத்தில் 2-வது பெரிய சந்தையாகும்.
தற்போது புரட்டாசி மாதம் முடிந்து தீபாவளி பண்டிகை வருவதால் நேற்று விற்பனைக்கு ஏராளமான ஆடு, கோழிகள், மாடுகள் கொண்டு வரப்பட்டது.
இதை வாங்க ஈரோடு, கோவை, சேலம், நாமக்கல், கரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வந்திருந்தனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆடு, கோழி, மாடுகளின் விலை உயர்ந்து காணப்பட்டது. இதில் 1000-க்கும் மேற்பட்ட ஆடுகள், கோழிகள் ரூ.1 கோடிக்கு விற்பனையானது. இதேபோல் மாடுகளும் ரூ.1 கோடிக்கு விற்பனையானது. இன்று காலையும் ஆட்டுசந்தை நடந்தது.
இதிலும் ஏராளமான வியாபாரிகள் கலந்து கொண்டு ஆடுகளை வாங்கி சென்றனர். இந்த வார சந்தையில் தீபாவளி யை யொட்டி ஆடு, கோழி, மாடுகள் ரூ.2 கோடி அளவுக்கு வியாபாரம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.