உள்ளூர் செய்திகள்

பவானி கூடுதுறை காவிரி ஆற்று படித்துறை பகுதியில் பவானி தீயணைப்பு துறையினர் ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

பவானி கூடுதுறையில் தென்மேற்கு பருவமழை ஒத்திகை பயிற்சி

Published On 2023-06-25 07:39 GMT   |   Update On 2023-06-25 07:39 GMT
  • பவானி தீயணைப்பு துறை சார்பில் முதல் உதவி சிகிச்சை ஒத்திகை பயிற்சி தத்ரூபமாக செய்து காண்பிக்கப்பட்டது.

பவானி:

தென்மேற்கு பருவமழையின் காரணமாக காவேரி ஆற்றில் ஏற்படும் வெள்ள பெருக்கின் போது தண்ணீரால் ஏற்படும் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் விதமாக ஒத்திகை பயிற்சி தீயணைப்பு துறை வீரர்கள் மூலம் ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம்.

அதேபோல் இந்தாண்டு பவானி சங்கமேஸ்வரர் கோவில் பின் பகுதியில் உள்ள இரட்டை விநாயகர் சன்னதி கூடுதுறையில் பவானி தீயணைப்பு துறை சார்பில் தண்ணீரில் அடித்து செல்லும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்து முதல் உதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு கொண்டு செல்வது வரை என ஒத்திகை பயிற்சி தத்ரூபமாக செய்து காண்பிக்கப்பட்டது.

இதில் பவானி தீயணை ப்பு நிலைய அலுவலர் மற்றும் வீரர்கள், பொது மக்கள், பக்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News