உள்ளூர் செய்திகள்

பவானிசாகர் அணையில் இருந்து ஆற்றுக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்

Published On 2022-11-01 07:16 GMT   |   Update On 2022-11-01 07:16 GMT
  • இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை தொடர்ந்து 102 அடியில் உள்ளது.
  • குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் இன்று காலை முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய அணையாக பவானிசாகர் அணை உள்ளது. 105 அடி கொள்ள ளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வந்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக கடந்த மாதம் 17-ந் தேதி பவானிசாகர் அணை 102 அடியை எட்டியது.

அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே பவானி ஆற்றுக்கு திருப்பி விடப்பட்டு வந்தது.

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை தொடர்ந்து 102 அடியில் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,566 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது.

அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு மட்டும் 300 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் இன்று காலை முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News