ஈரோட்டில் பள்ளிகளுக்கு உற்சாகமாக சென்ற மாணவ-மாணவிகள்
- காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து இன்று முதல் மீண்டும் பள்ளிகள் செயல்பட தொடங்கியுள்ளது.
- இன்று காலை வழக்கு போல் மாணவ-மாணவிகள் தங்களது பள்ளிகளுக்கு உற்சாகத்துடன் கிளம்பி சென்றனர்.
ஈரோடு:
பள்ளி மாணவர்களுக்கு கடந்த செப்டம்பர் மாதம் 27-ந் தேதி காலாண்டு தேர்வு விடுமுறை விடப் பட்டது. விடுமுறையை கொண்டாடுவதற்காக ஈரோட்டில் இருந்து ஏராளமான மாணவர்கள் பெற்றோருடன் சொந்த ஊருக்கு சென்றனர்.
இந்நிலையில் காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து இன்று முதல் மீண்டும் பள்ளிகள் செயல்பட தொடங்கியுள்ளது. 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டு ள்ளது.
அதே நேரம் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை மாணவ-மாணவிகளுக்கு வரும் 9-ந் தேதி முதல் பள்ளிகள் செயல்பட தொடங்கும் என அறிவிக்கப்பட்டு ள்ளது. தனியார் பள்ளிகள் இன்று முதல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து நேற்று மாலை முதல் ஈரோடு பஸ் மற்றும் ெரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. சொந்த ஊருக்கு சென்றவர்கள் மீண்டும் ஒரே நேரத்தில் குவிந்ததால் ஈரோடு ெரயில் நிலையம், பஸ் நிலையம் ஸ்தம்பித்தது.
அனைத்து ெரயில்களிலும் முன்பதிவு பெட்டிகள் நிரம்பி விட்டதால் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் இடம் பிடிக்க கடும் போட்டி நிலவியது. இதேப்போல் பஸ்களிலும் இடம் பிடிக்க போட்டி நிலவியது. இதனால் ஈரோடு பஸ்- ரயில் நிலையம் பரபர ப்பாக காட்சியளித்தது.
இன்று காலை வழக்கு போல் மாணவ-மாணவிகள் தங்களது பள்ளிகளுக்கு உற்சாகத்துடன் கிளம்பி சென்றனர்.
அரசு பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு 2-ம் பருவத்ததற்கான பாட புத்தகம் இன்று வழங்கப்பட்டது. இதனால் இன்று காலை ஈரோடு மாநகர பகுதியில் மீனாட்சி சுந்தர னார் சாலை மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது.