2 பேர் உடல்கள் பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைப்பு
- ஆற்றில் மூழ்கி இறந்த 2 பேர் உடல்கள் பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
- மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.
கொடுமுடி:
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அடுத்த கிழக்கு சீராபாளையம் கருப்பராயன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி தீர்த்தம் எடுப்பதற்காக அந்த பகுதியை சேர்ந்த 40 ஆண்கள் 10 பெண்கள் என சுமார் 50 பேர் மன்னாதம்பாளையம் குல விளக்கு அம்மன் கோவில் எதிரில் உள்ள காவிரி ஆற்றுக்கு வந்தனர்.
அப்போது பெருமா நல்லூர் பள்ளபாளையம் பகுதியை சேர்ந்த இளங்கோ (21), பெருமா நல்லூர் கிழக்கு சீராம் பாளையத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (32) ஆகிய 2 பேர் காவிரி ஆற்றில் இறங்கி குளித்து கொண்டு இருந்தனர். அப்போது அவர்கள் காவிரி ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கி விட்டனர்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த உடன் வந்தவர்கள் மொடக்குறிச்சி தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். மொடக்குறிச்சி தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் மோகன் தலைமையில் தீயணைப்புத் துறை வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
அவர்கள் நீரில் மூழ்கியவர்களை தேடினர் அப்போது அவர்கள் இறந்த நிலையில் மீட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மலையம்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்தவர்களின் உடலை கைப்பற்றி ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்த 2 பேரில் உடல்கள் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவர்களது உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.