பழைய பாலத்தில் போக்குவரத்து தொடங்கியது
- மேட்டூர் அணையில் இருந்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு 1 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
- இந்த நிலையில் மேட்டூர் அைணயில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக குறைந்தது. இதனால் போக்குவரத்து தொடங்கியது.
சித்தோடு:
மேட்டூர் அணையில் இருந்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு 1 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இதனால் அம்மா பேட்டை, பவானி, ஈரோடு காவிரி ஆற்றில் இரு கரை களையும் தொட்டப்படி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதையொட்டி பவானி பூ மார்க்கெட் பகுதியில் இருந்து குமார பாளையம் செல்லும் பழைய பாலம் பகுதியில் பாலத்தை தொட்டப்படி காவிரி ஆற்றில் தண்ணீர் சென்றது.
இதனால் பவானி- குமார பாளையம் பழைய பாலத்தில் தடுப்புகள் அமைக்க ப்பட்டு போக்கு வரத்து தடை செய்யப் பட்டு இருந்தது. இதனால் பொது மக்கள் அவதி அடைந்து வந்தனர்.
இந்த நிலையில் மேட்டூர் அைணயில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக குறைந்தது. இதனால் பவானி பழைய பாலம் காவிரி ஆற்றில் தண்ணீர் குறைந்தது.
இந்த நிலையில் பவானி- குமாரபாளையம் பழைய பாலத்தில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. இதையடுத்து பாலத்தில் போடப்பட்ட தடுப்புகள் அப்புறப்படுத்தப்பட்டது. அதன் பிறகு அந்த வழியாக வாகன போக்குவரத்து தொடங்கியது. இதனால் அந்த பாலம் வழியாக வாகனங்கள் சென்று வருகிறது.