புதிய பாரதம் எழுத்தறிவு திட்டத்தில் படிப்பவர்களுக்கு தேர்வு
- தமிழ் மற்றும் கணிதத்தில் அடிப்படை திறன்கள் கற்றுத்தரப்பட்டது.
- ஏ.டி.எம். பயன்படுத்தும் முறை, வங்கியில் பணம் எடுக்கும் முறை குறித்து கற்றுத்தரப்பட்டது.
சீர்காழி:
கொள்ளிடம் ஒன்றி யத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் முற்றிலும் எழுத படிக்க தெரியாத கல்லாதோருக்கு அடிப்படை எழுத்தறிவை தெரிந்து கொள்ள கொள்ளிடம் ஒன்றியத்தில் 38 மையங்களில் சுமார் 780 கற்போர்கள் பயின்று வந்தனர்.
இவர்களின் கற்றலை மதிப்பிடும் வகையில் 38 மையங்களில்அடிப்படை எழுத்தறிவு தேர்வுநடை பெற்றதுதேர்விற்கு முதன்மை கண்காணிப்பாளராக தலைமை ஆசிரியரும் அறை கண்காணிப்பாளராக தன்னார்வலர்களும் செயல்பட்டனர்
தேர்வு நடைபெற்ற மையங்களை வட்டார கல்வி அலுவலர் சரஸ்வதி வட்டார வளமைய மேற்பார்வை யாளர் ஞானபுகழேந்தி ஆசிரியர் பயிற்றுநர்கள் பாக்கியலட்சுமி ஐசக் ஞானராஜ் கவிதா ஆகியோர் மையங்களை பார்வையிட்டனர்.
வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஞான புகழேந்தி கூறும் போது முழுவதும் எழுதப் படிக்க தெரியாதவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தமிழ் மற்றும் கணிதத்தில் அடிப்படைத் திறன்களை கற்றுத் தரப்பட்டது.
ஏடிஎம் பயன்படுத்தும் முறை, வங்கியில் பணம் எடுக்கும் முறை, பேருந்து மற்றும் ரயில் டிக்கெட் பதிவு செய்யும் முறை, அஞ்சல் நிலையங்களில் பணம் செலுத்தும் முறை, ஆகியவை கற்றுத் தரப்பட்டது.
இத்தேர்வை கோயில்கள் பள்ளிகள் மற்றும் அவர்கள் வேலை செய்யும் இடங்களுக்கே சென்று தேர்வு வைக்கப்பட்டது இத்தேர்வில் கற்போர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தேர்வை எழுதினர் என்றார்.