வாராந்திர சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு
- 2 மாதங்களுக்கு ரெயில் சேவை நீட்டிக்கப்படுவதாக திருச்சி ரெயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
- ஹுப்ளியில் இருந்து இரவு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் தஞ்சாவூர் சென்றடையும்.
தஞ்சாவூர்:
கர்நாடக மாநிலம் ஹுப்ளி - தஞ்சாவூர் இடையே இரு மார்க்கத்திலும் திருச்சி வழியாக வாராந்திர சிறப்பு ரெயில் கடந்த மார்ச் மாதம் முதல் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த ரெயில் சேவை இந்த மாதத்துடன் முடிவடைய இருந்தது.
இருந்தாலும் பயணிகளின் வரவேற்பு தொடர்ந்து மேலும் 2 மாதங்களுக்கு ரெயில் சேவை நீட்டிக்கப்படுவதாக திருச்சி ரெயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :-
ஹுப்ளி - தஞ்சாவூர் வாராந்திர சிறப்பு ரெயில் செப்டம்பர் 25ஆம் தேதி வரை திங்கள்கிழமை தோறும் இயக்கப்படும்.
இந்த ரெயில் ஹுப்ளியில் இருந்து இரவு 8.25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 2.15 மணிக்கு தஞ்சாவூர் சென்றடையும்.
மறு மார்க்கமாக தஞ்சாவூர் -ஹுப்ளி வாராந்திர சிறப்பு ரெயில் செப்டம்பர் 26-ம் தேதி வரை செவ்வாய்க்கிழமைகளில் இயக்கப்படும்.
தஞ்சாவூரில் இருந்து இரவு 7.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.30 மணிக்கு ஹுப்ளி சென்றடையும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.