விவசாயி தீக்குளிக்க முயற்சி பரபரப்பு
- தருமபுரி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயற்சித்தார்.
- நிலப்பிரச்சனையால் சம்பவம்
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த அஜ்ஜனள்ளி கிராமத்தைச் சேர்ந்த ராஜகோபால் தனது குடும்பத்தினருடன் விவசாய நிலத்தில் வசித்து வருகிறார். ராஜகோபால் விவசாய நிலத்திற்கு அருகில் அரசு ஓடை புறம்போக்கு இருந்து வந்துள்ளது.
இந்த ஓடை புறம்போக்கு வழியாக தனது விவசாய நிலத்திற்கு காலகாலமாக சென்று வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த செல்வம், குமார், சுரேஷ், பொன்முடி, மகேந்திரன் ஆகியோர் ஓடை புறம்போக்கு ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வருகின்றனர். இதில் ராஜ கோபால் வயலுக்கு செல்ல வழி விடாமல் மிரட்டி வரு வதாக கூறப்படுகிறது.
மேலும் விவசாய நிலத்தி ற்கு வழி விடாமலும், வயதான நிலையில் மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்கும் வழியில்லாமல் ராஜ கோபால் குடும்பத்தகனர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான, ராஜகோபால் தனது குடும்பத்தினருடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு புகார் மனு அளிப்பதற்காக வந்தி ருந்தார்.
அப்பொழுது திடீ ரென மறைத்து வைத்திருந்த 5 லிட்டர் பெட்ரோல் கேனை எடுத்து, உடலின் மீது ஊற்றி தற்கொலை செய்வதற்கு முயற்சித்தார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி அவரிடம் விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.