உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

கொடைக்கானலில் காட்டெருமை தாக்கி விவசாயி படுகாயம்

Published On 2023-01-22 05:36 GMT   |   Update On 2023-01-22 05:36 GMT
  • காட்டெருமை நகர் பகுதியில் கூட்டமாக முகாமிட்டுள்ளது. இந்த காட்டெருமை கூட்டம் நகர்பகுதியில் உலா வருவதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.
  • விவசாயியின் கால் பகுதியில் காட்டு மாடு கடுமையாக தாக்கியதில் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கொடைக்கானல்:

கொடைக்கானல் வனப்பகுதியில் காட்டெருமை, காட்டுபன்றி, யானை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இவை அடிக்கடி உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு, விவசாய பகுதிகளுக்குள் புகுந்து விடுகின்றன.

குறிப்பாக காட்டெருமை நகர் பகுதியில் கூட்டமாக முகாமிட்டுள்ளது. இந்த காட்டெருமை கூட்டம் நகர்பகுதியில் உலா வருவதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்துள்ளனர். மேலும் காட்டெருமை தாக்கி உயிர் பலியும் ஏற்பட்டு வருகிறது.

இந்தநிலையில் பிரகாசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன் (68). இன்று காலை தனது தோட்டத்தில் பராமரிப்பு பணிக்காக சென்றுள்ளார்.அப்போது பயிர்களை சேதப்படுத்தும் மயில்களை விரட்டும் வேலையில் ஈடுபட்டுள்ளார்.

அப்பகுதியில் கடந்த 15 நாட்களாக முகாமிட்டிருந்த ஒற்றை காட்டெருமை தோட்டத்திற்குள் புகுந்துள்ளது.அதனை விரட்ட முயற்சி செய்தபோது விவசாயி மனோகரனை கடுமையாக தாக்கியுள்ளது. இதில் கால் பகுதியில் கடுமையாக தாக்கியதில் விவசாயி படுகாயம் அடைந்தார்.சம்பவம் அறிந்த அப்பகுதியினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர்.

உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டதால் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இது குறித்து கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News