உள்ளூர் செய்திகள்

தஞ்சை உழவர் சந்தையில் தோட்டக்கலை துறை துணை இயக்குனர் கலைச்செல்வன் ஆய்வு செய்தார்.

உழவர் சந்தையில் விரைவில் இடுபொருட்கள் விற்பனை அரங்கு - துணை இயக்குனர் தகவல்

Published On 2022-06-24 10:14 GMT   |   Update On 2022-06-24 10:14 GMT
  • உழவர் சந்தையில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவுறுத்தல்படி தோட்டக்கலை துறை சார்பில் இடுபொருட்கள் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.
  • இந்த விற்பனை அரங்கில் விதை, நாற்றுக்கள், மாடி தோட்ட விதைகள், மண்புழு உரம் உள்பட பல்வேறு இடுபொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருக்கும்.

தஞ்சாவூர்:

தஞ்சை நாஞ்சிக்கோ ட்டை சாலையில் உழவர் சந்தை உள்ளது. இந்த சந்தையில் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு இங்குள்ள கடைகள் அருகே உள்ள கட்டிடத்துக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து உழவர் சந்தையில் பணிகள் நடந்து வந்தன. இந்நிலையில் பணிகள் முடிவடைந்ததை முன்னிட்டு இன்று காலை உழவர் சந்தை திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

இதனை தொடர்ந்து 55 கடைகள் இன்று செயல்பட்டன. அதில் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவைகள் விற்பனை செய்யப்பட்டது. இன்று ஒரே நாளில் 15.8 டன் அளவுக்கு காய்கறி, பழங்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது.இந்த நிலையில் உழவர் சந்தையில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் றிவுறுத்தல்படி தோட்ட க்கலை துறை சார்பில் இடுபொருட்கள் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. இன்னும் சில நாட்களில் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வர உள்ளது.

இதனை தொடர்ந்து தோட்டக்கலை துறை துணை இயக்குனர் கலைச்செல்வன் உழவர் சந்தையில் ஆய்வு செய்தார். தோட்டகலை துறை சார்பில் இடுபொருட்கள் விற்பனை அரங்கு அமைய உள்ள இடத்தை பார்வையிட்டார். அப்போது அவர் கூறும்போது:-

வேளாண் துறை அமைச்சர் அறிவுறுத்தல்படி தமிழகத்தில் தேர்ந்தெ டுக்கப்பட்ட உழவர் சந்தைகளில் தோட்ட க்கலை துறை சார்பில் இடுபொருட்கள் விற்பனை அரங்கு அமைக்கப்பட உள்ளது. அதில் தஞ்சாவூர் உழவர் சந்தையும் ஒன்றாகும். இந்த விற்பனை அரங்கில் விதை, நாற்றுக்கள், மாடி தோட்ட விதைகள், மண்புழு உரம் உள்பட பல்வேறு இடுபொருட்கள் விற்பனைக்காக வைக்க ப்பட்டு இருக்கும். விரை வில் இந்த உழவர் சந்தையில் இடுபொருட்கள் விற்பனையகம் தொட ங்கப்பட உள்ளது என்றார்.

Tags:    

Similar News