உள்ளூர் செய்திகள்

தக்காளி சந்தையில் குவிந்த வியாபாரிகள்.

அய்யலூர் சந்தையில் தக்காளி விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

Published On 2022-09-08 04:53 GMT   |   Update On 2022-09-08 04:53 GMT
  • கால நிலை பருவ மாற்றத்தால் மழை பெய்துள்ளதால் தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. கடந்த வாரம் 14 கிலோ கொண்ட பெட்டி ரூ.70 முதல் ரூ.150 வரை விற்பனையானது.
  • தக்காளி விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

வடமதுரை:

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை மற்றும் அய்யலூர் பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் தக்காளியை பயிரிட்டு வருகின்றனர். இந்த நிலையில் கால நிலை பருவ மாற்றத்தால் மழை பெய்துள்ளதால் தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. கடந்த வாரம் 14 கிலோ கொண்ட பெட்டி ரூ.70 முதல் ரூ.150 வரை விற்பனையானது.

தற்போது ரூ.450 முதல் ரூ.600 வரை விற்பனையானது . அய்யலூர் தினசந்தையில் சுமார் 10 டன் களுக்கு தக்காளி வந்திருந்தது. தக்காளி விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அய்யலூர் சின்ன சந்தைக்கு வரும் தக்காளி இங்கிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், சென்னையில் தக்காளி விலை உயர்ந்ததால் திண்டுக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து தக்காளி கொள்முதல் செய்யப்பட்டு பசுமை பண்ணைகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் வெளிமாநிலத்தில் இருந்து தக்காளி வரத்து நின்றுள்ளது.

தற்போது முகூர்த்த நாட்கள், திருவிழாக்கள் அதிகளவில் நடைபெறுவதால் தக்காளி தேவை அதிகரித்துள்ளது. இதன்காரணமாகவே ஒருகிலோ ரூ.50 முதல் ரூ.60 வரை தரத்திற்கேற்ப விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்றனர்.

Tags:    

Similar News