விவசாயியை தாக்கியவர் சிறையில் அடைப்பு
- நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா சோழசிராமணி அருகே வெய்யகாஞ்சன்புதூர் பகுதியில் விவசாயியை தாக்கியவர் சிறையில் அடைத்தனர்.
- இதனால் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ராசு, அங்கு கிடந்த கற்களை எடுத்து பெரியசாமி மீது எறிந்து தாக்கியுள்ளார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா சோழசிராமணி அருகே வெய்யகாஞ்சன்புதூர் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி( வயது 55). விவசாயி. இவர்கள் தோட்டம் அருகாமையில் உள்ளது. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராசு(43)என்பவருக்கும் தடப்பிரச்சனை காரணமாக முன் விரோதம் உள்ளது.
இந்நிலையில் நேற்று பெரியசாமி அவரது தோட்டத்திற்கு சென்றபோது, ராசு அவரை தடுத்து தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். இதனால் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ராசு, அங்கு கிடந்த கற்களை எடுத்து பெரியசாமி மீது எறிந்து தாக்கியுள்ளார். மேலும் அங்கிருந்த மரக்கட்டையால் சரமாரியாக தாக்கியதில் பெரியசாமி பலத்த காயம் அடைந்தார்.
அதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் பெரியசாமியை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீசில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து ராசுவை கைது செய்து, பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பரமத்தி கிளைச் சிறையில் அடைத்தனர்.