உள்ளூர் செய்திகள்

அம்பை வட்டாரத்தில் விவசாயிகள் கிசான் அட்டைகள் பெற விண்ணப்பிக்கலாம்- வேளாண்மை அதிகாரி தகவல்

Published On 2023-07-18 08:59 GMT   |   Update On 2023-07-18 08:59 GMT
  • குறைந்தபட்சம் ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கர் அளவில் நிலம் இருத்தல் அவசியம் ஆகும்.
  • கிசான் அட்டையை பயன்படுத்தி வங்கிகளில் எந்த அடகும் இன்றி ரூ. 1 லட்சம் வரை கடன் பெறும் வசதி உள்ளது.

அம்பை:

அம்பை வேளாண்மை உதவி இயக்குநர் கற்பக ராஜ்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கிசான் கடன்அட்டை

வேளாண்மைத்துறை சார்பாக அம்பை வட்டா ரத்தில் கிசான் கடன் அட்டைகள் பெற முகாம்கள் இன்று முதல் நடத்தப்பட உள்ளது. விவசாயிகள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

கிசான் கடன் அட்டைகள், தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாகவும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாகவும் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

வங்கிகளை விவசாயிகள் அணுகும் சிரமங்களை குறைப்பதற்காக கிசான் கடன் அட்டைக்கான விண்ணப்ப படிவங்கள், ஆவணங்கள் விவசாயிகளிடம் இருந்து பெற்று வேளாண்மைதுறை மூலம் அந்தந்த வங்கி களுக்கு அனுப்பப் படுகிறது. இதற்கான முகாம்கள் அம்பை, அயன் சிங்கம்பட்டி மற்றும் விக்கிரமசிங்கபுரம் ஆகிய வேளாண்மை விரிவாக்க மையங்களில் அமைக்கப் பட்டு இன்று முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஆதார் அட்டை

விவசாயிகள் தங்கள் நில உடமை ஆவணங் களுடன் ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல், புகைப்படம் ஆகிய வற்றுடன் தங்கள் அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகி உரிய விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து சமர்பிக்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கர் அளவில் நிலம் இருத்தல் அவசியம் ஆகும்.

கிசான் கடன் அட்டையை பயன்படுத்தி தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் எந்த அடகும் இன்றி ரூ. 1 லட்சம் வரை கடன் பெறும் வசதி உள்ளது. விவசாயிகள் தாங்கள் பயிரிடும் பயிருக்குத் தேவையான இடுபொருட்களை வாங்கிக் கொள்வதற்கும் கிசான் கடன் அட்டையை பயன்படுத்தி கொள்ளலாம்.

விவசாயிகள் கடன் பெற தகுதி உள்ளவர்கள் என்பதைக் குறிக்கும் வகையில் கிசான் கடன் அட்டை அந்தந்த வங்கிகள் மூலம் வழங்கப்படுகிறது. ஏற்கனவே விண்ணப் பங்கள் சமர்ப்பித்து கிசான் கடன் அட்டை பெறாத விவசாயிகள் இம்முகாமில் மீண்டும் விண்ணப்பம் செய்யலாம்.

இதுவரை விண்ணப் பிக்காத விவசாயிகளும் விண்ணப்பிக்கலாம். எனவே விவசாயிகள் இம்முகாமைப் பயன்படுத்தி கிசான் கடன் அட்டை பெற விண்ணப்பங்கள் மற்றும் ஆவணங்கள் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News