உள்ளூர் செய்திகள்

காேப்புபடம்

வாழை வர்த்தகம் அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி

Published On 2022-06-13 07:57 GMT   |   Update On 2022-06-13 07:57 GMT
  • அறுவடை செய்யப்படும் நேந்திரன் வாழைக்காய், கேரளாவுக்கு, சிப்ஸ் தயாரிக்க பெருமளவில் அனுப்பி வைக்கப்படுகிறது.
  • ஓரிரு ஆண்டாக விலையில்லாததால் வாழை விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்தித்தனர்.

அவிநாசி,

திருப்பூர், கோவை மாவட்டத்துக்கு உட்பட்டு அவிநாசி, சேவூர், அன்னூர், சிறுமுகை, சத்தியமங்கலம் உட்பட பல இடங்களில் 20 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பில், வாழை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

அறுவடை செய்யப்படும் நேந்திரன் வாழைக்காய், கேரளாவுக்கு, சிப்ஸ் தயாரிக்க பெருமளவில் அனுப்பி வைக்கப்படுகிறது. மும்பை உள்ளிட்ட இடங்களுக்கும் நேந்திரன் வாழை அனுப்பி வைக்கப்படுகிறது.கடந்த3 ஆண்டாக கொரோனா பாதிப்பால் நேந்திரன் வாழை வர்த்தகம் பாதித்தது. ஆனால் இந்தாண்டு, கிராக்கி அதிகரித்திருக்கிறது. விவசாயிகளிடம் இருந்து கிலோ 60 ரூபாய்க்கு நேந்திரன் வாழை கொள்முதல் செய்யப்படுகிறது.விவசாயிகள் கூறுகையில், கடந்த ஓரிரு ஆண்டாக விலையில்லாததால் வாழை விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்தித்தனர். இந்தாண்டு நல்ல விலை கிடைத்து வருகிறது என்றனர்.

Tags:    

Similar News