ஒட்டன்சத்திரம் அருகே புகையிலை சாகுபடியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்
- ஜவ்வாதுபட்டி, சோளியப்பகவுண்டனூர், வெரியப்பூர், கேதையறும்பு, திப்பம்பட்டி பகுதிகளில் அதிகளவு புகையிலை பயிரிடப்பட்டுள்ளது.
- கூட்டுறவு சங்கங்கள் மூலம் அரசு கொள்முதல் செய்தால் மேலும் விலை கிடைக்கும். எனவே இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
ஒட்டன்சத்திரம்:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே இடையகோட்டை பகுதியில் விவசாயமே முக்கிய தொழிலாக உள்ளது. மேலும் சுற்றுவட்டார பகுதிகளான ஜவ்வாதுபட்டி, சோளியப்பகவுண்டனூர், வெரியப்பூர், கேதையறும்பு, திப்பம்பட்டி பகுதிகளில் அதிகளவு புகையிலை பயிரிடப்பட்டுள்ளது.
நடவு செய்யப்பட்டு 40 முதல் 50 நாளில் உற்பத்தி யாகிறது. ஒரு ஏக்கருக்கு 6000 நாற்றுகள் என ரூ.1800க்கு வாங்கி நடவு செய்கின்றனர். 120 நாளில் இருந்து புகையிலை செடி விளைச்சல் ஆகிறது. மற்ற விவசாயத்தை விட இதில் செலவுகள் குறைவு என்பதால் ஆர்வமுடன் பயிரிட்டு வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்,
கடந்த ஆண்டு ஒரு பச்சை புகையிலை ரூ.8 முதல் ரூ.10 வரையும்,வெயிலில் காயவைத்த ஒருகிலோ புகையிலை ரூ.95 முதல் ரூ.105 வரை வியாபாரிகளால் கொள்முதல் செய்ய ப்பட்டது.
இந்த ஆண்டு அதைவிட கூடுதலாக விற்பனையாக வாய்ப்புள்ளது. நன்றாக பராமரித்து வளர்த்தால் ரூ.1 லட்சம் வரை லாபம் கிடைக்கும். விைல இல்லாத நேரத்தில் புகையிலையை பதப்படுத்தி வைத்து க்கொள்ளலாம். பின்னர் விலை உயரும் போது அதை விற்பனை செய்யலாம். தற்போது இடையகோட்டை பகுதியில் புகையிலை நன்கு விளைச்சல் கண்டுள்ளது. தொடர் மழை பெய்த போதும் பெரியளவில் பாதிப்பு இல்லை.
வெளிமாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் தோட்டங்களுக்கே வந்து வியாபாரிகளிடம் வாங்கி ச்செல்கின்றனர். குறைந்த விலைக்கு வாங்கி அதிகள வில் அதிக விலைக்கு விற்பதாக குற்றச்சாட்டு எழுந்தபோதும் தொடர்ந்து விவசாயிகள் அவர்களிடம் புகையிலை விற்பனை செய்து வருகின்றனர்.
எனவே விவசாயி களிடமிருந்து கூட்டுறவு சங்கங்கள் மூலம் அரசு கொள்முதல் செய்தால் மேலும் விலை கிடைக்கும். எனவே இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.