உள்ளூர் செய்திகள்

கள்ளிமந்தையத்தில் தக்காளி சாகுபடி செய்து விற்பனைக்கு அனுப்பும் விவசாயிகள்.

கள்ளிமந்தையத்தில் பற்றாக்குறை சமயத்தில் தக்காளி பயிரிட்டு லாபம் பார்த்த விவசாயிகள்

Published On 2023-07-26 05:10 GMT   |   Update On 2023-07-26 05:10 GMT
  • திண்டுக்கல் மாவட்ட த்தில் கடந்த 2 வாரத்துக்கும் மேலாக தக்காளி விலை குறையாமல் ரூ.100 முதல் ரூ.140 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
  • கள்ளிமந்தையம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தக்காளி பயிரிட்டு நல்ல லாபம் கிடைத்துள்ளதாக தெரிவித்தனர்.

ஒட்டன்சத்திரம்:

திண்டுக்கல் மாவட்ட த்தில் கடந்த 2 வாரத்துக்கும் மேலாக தக்காளி விலை குறையாமல் ரூ.100 முதல் ரூ.140 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உழவர் சந்தை, மொத்த மார்க்கெட்டுகளில் விலை குறையாததால் சில்லரை விற்பனையிலும் மக்கள் அதிக விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ள ப்பட்டனர்.

வரத்து குறைவு மற்றும் வெளி மாநிலங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக தக்காளி விலை உயர்ந்துள்ளதாக வியா பாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் இடைய கோட்டை, கள்ளிமந்தையம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் கடந்த சித்திரை மாதம் தக்காளி நடவு செய்தனர். அதை 70 நாளில் அறுவடை செய்து மார்க்கெட்டுக்கு விற்பனை செய்தபோது அதிக வரத்தால் மிகக்குறைந்த விலைக்கு வியாபாரிகள் வாங்கியதால் போக்குவரத்து செலவிற்கு கூட கட்டுபடியாகாததால் விவசாயிகள் தக்காளியை பறித்து சாலை ஓரங்களில் கொட்டிய காலம் ஏற்பட்டது.

சரியான நேரத்தில் பருவமழை பெய்யாதது, மாறுபட்ட சிதோஷண நிலை, திடீரென தக்காளி விளைச்சல் வரும் நேரத்தில் பெய்த மழை, வெயில் உள்ளிட்ட பருவ நிலை மாறுபாட்டால் விளைச்சல் பாதிக்கப்பட்டது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு தக்காளி விலை கடும் வீழ்ச்சியடைந்ததால் பலரும் தக்காளியை பயிரிட விரும்பவில்லை. இதனால் தற்போது பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

அதன்பிறகு தக்காளி பயிரை அழித்து மாற்று விவசாயத்திற்கு விவசாயி கள் சென்று விட்டனர். வரத்து குறைந்ததால் தக்காளி விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நகரத்திற்கு ஏற்ற வகையில் ஒரு கிலோ தக்காளி ரூ.100 முதல் ரூ.150 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 1 கிலோவில் 10 முதல் 15 தக்காளிகள் வரை இருக்கும். இன்றைய விலையை கணக்கு பார்த்தால் ஒரு தக்காளி ரூ.13 என்ற விலையில் உள்ளது.

கடந்த 70 நாட்களுக்கு முன்பு நடவு செய்து தற்போது பறித்து விற்ப னைக்கு அனுப்பி வரும் கள்ளிமந்தையம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைத்துள்ளது.

இது குறித்து விவசாயி செல்வராஜ் கூறுகையில், பக்கத்து தோட்டத்தில் தக்காளி பயிரிட்டதால் அதை பார்த்து மற்ற அனைத்து விவசாயிகளும் தக்காளியையே பயிரிடுவ தால் வரத்து அதிகரிக்கு ம்போது விலை கிடைப்ப தில்லை.

இதனையடுத்து விவசாயி கள் மற்ற விவசாயத்திற்கு மாறிய நேரத்தில் நான் 2 ஏக்கர் அளவில் தக்காளி நடவு செய்து கவனத்தோடு முறையாக பராமரித்து வந்ததால் தற்போது 3 நாளைக்கு ஒரு முறை 14 கிலோ கொண்ட பெட்டியில் 30 பெட்டிகள் வரை தக்காளி கிடைக்கிறது.

வரத்து குறைந்த நேரத்தில் தக்காளியை பறித்து ஒட்டன்சத்திரம் காந்தி மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு சென்றால் 14 கிலோ கொண்ட பெட்டி ரூ.900 முதல் ரூ.1300 வரை வியா பாரிகள் வாங்குகி றார்கள்.

வியாபாரிகளிடம் இருந்து சில்லரை வியாபாரி கள் வாங்கி அதை ஒரு கிலோ ரூ.150 வரை விற்பனை செய்கின்றனர். இதனால் இந்த முறை தக்காளி சாகுபடி எங்களுக்கு நல்ல பலனை கொடுத்துள்ளது என்றார்.

Tags:    

Similar News