டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
- கல்லூரி வளாகத்தில் உள்ள பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உள்விளையாட்டு அரங்கில் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
- உணவு பாதுகாப்பு ஆய்வாளர் சக்திமுருகன் தரமற்ற உணவுப்பண்டங்களை எவ்வாறு அடையாளம் காண வேண்டும்? என்பதை மாணவ, மாணவியரிடம் எடுத்துரைத்து செய்முறை விளக்கம் கொடுத்தார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியின் அக மதீப்பீட்டின் (ஐகியுஏசி) சார்பில் கல்லூரி வளாகத்தில் உள்ள பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உள்விளையாட்டு அரங்கில் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. கல்லூரி முதல்வர் சாம்ராஜ் தலைமை தாங்கினார். உதவிபேராசிரியர் கணேசன் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக மாவட்ட உணவு பாதுகாப்பு ஆய்வாளர் சக்திமுருகன் கலந்து கொண்டு தரமற்ற உணவுப் பண்டங்களை எவ்வாறு அடையாளம் காண வேண்டும்? என்பதை மாணவ, மாணவியரிடம் எடுத்துரைத்து செய்முறை விளக்கம் கொடுத்தார். நிகழ்ச்சிகளை உதவிபேராசிரியர் செல்வகுமார் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில், கல்லூரி பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். கல்லூரி அக மதீப்பீட்டு ஒருங்கிணைப்பாளர் இணை பேராசிரியை தனலெட்சுமி நன்றி கூறினார்.