உள்ளூர் செய்திகள்

சேலத்தில் வேலை தருவதாக கூறி இளம்பெண்ணிடம் ரூ 9.75 லட்சம் மோசடி

Published On 2023-03-09 09:43 GMT   |   Update On 2023-03-09 09:43 GMT
  • சேலம் சூரமங்கலம் காசக்காரனூர் மாணிக்கவாசகர் தெருவை சேர்ந்தவரிடம் தனது வங்கிக் கணக்கில் இருந்து மோசடி நபர்கள் குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு ரூ.9.75 லட்சத்தை பரிமாற்றம் செய்துள்ளார்.
  • பின்னர் சூர்யாவிற்கு ஆன்லைன் வேலை உறுதி செய்யப்பட்டதாக தகவல் அனுப்பி விட்டு மர்ம நபர் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டார். அதன்பிறகு அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்ட சூர்யா தன் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

சேலம்:

சேலம் சூரமங்கலம் காசக்காரனூர் மாணிக்கவாசகர் தெருவை சேர்ந்தவர் மகேஷ் குமார். இவரது மனைவி சூர்யா (வயது 31).

இவரது செல்போனில் வாட்ஸ் அப் மூலம் வந்த ஒரு தகவல் வந்தது. அதில் குறிப்பிட்டுள்ள டாஸ்க்குகளை முடித்தால் ஆன்லைன் மூலம் வேலை தருவதாக கூறி ஒரு லிங்கை அனுப்பியுள்ளார்கள்.

இதை நம்பிய சூர்யா அதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது சூர்யா தனது வங்கிக் கணக்கில் இருந்து மோசடி நபர்கள் குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு ரூ.9.75 லட்சத்தை பரிமாற்றம் செய்துள்ளார்.

பின்னர் சூர்யாவிற்கு ஆன்லைன் வேலை உறுதி செய்யப்பட்டதாக தகவல் அனுப்பி விட்டு மர்ம நபர் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டார். அதன்பிறகு அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்ட சூர்யா தன் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News