சிவகிரியில் இலவச சட்ட பயிற்சி முகாம்
- இலவச சட்ட பயிற்சி முகாம் சிவகிரி மு.வீ.தே.தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது.
- போலீஸ் நிலையத்தில் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வைப்பது எப்படி? என்பது குறித்த சட்டப் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.
சிவகிரி:
சிவகிரியில் பாதிக்கப்பட்டோர் கழகம், வரி செலுத்துவோர் நல உரிமை, புளியங்குடி சமூக பாதுகாப்பு சங்கம் மற்றும் மாற்றத்தை நோக்கி குழு சங்கங்களின் சார்பில் இலவச சட்ட பயிற்சி முகாம் சிவகிரி மு.வீ.தே.தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பாதிக்கப்பட்டோர் கழகம் மாநில தலைவர் கணேசன், மு.வீ.தே.தொடக்கப்பள்ளி செயலாளர் பாலு ஆசிரியர், வரி செலுத்துவோர் நல சங்கம் தலைவர் அருணாசலம் ஆகியோர் தலைமை தாங்கினார். ஆசிரியர் மருதுபாண்டியன், குட்டி ராசு, தீபக் ராஜப்பா, சதீஷ் குமார், சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தி வெற்றி பெறுவது எப்படி?, அரசு வழங்கும் இலவச சேவைகளை லஞ்சம் இல்லாமல் பெறுவது எப்படி?, போலீஸ் நிலையத்தில் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வைப்பது எப்படி? என்பது குறித்த இலவச சட்டப் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.
இதுபோன்ற நிகழ்ச்சிகளை இனிவரும் காலங்களில் அரசே நடத்த வேண்டும் அப்போதுதான் சரியான முறையில் மக்களுக்கான சேவைகளை செய்யப்படும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. இந்நிகழ்ச்சியில் பிற மாவட்ட பகுதிகளில் இருந்து சமூக ஆர்வலர்கள் 136 பேர் கலந்து கொண்டனர்.