தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் 3 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம்
- வேத மந்திரங்கள் முழங்க இன்னிசை மேளத்துடன் மணமக்களுக்கு திருமணம் நடைபெற்றது.
- 2 கிராம் தங்கத்துடன் பாத்திரம், டம்ளர், மிக்ஸி உள்பட 30 வகையான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.
தஞ்சாவூர்:
தமிழக அரசின் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் தஞ்சாவூர் அருகே உள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் அரசு சார்பில் 3 ஏழை ஜோடிகளுக்கு இலவசமாக திருமணம் செய்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு எம்.எல்.ஏ.க்கள் துரை சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம் ஆகியோர் தலைமை தாங்கினர்.
துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சூரியநாராயணன், உதவி ஆணையர்கள் நாகையா, கவிதா, கண்காணி ப்பாளர்கள் சந்திரசேகரன், பாலசுப்ரமணியன், இ.ஓ. மாதவன், மேற்பார்வை யாளர்கள் ரங்கராஜன், செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வேத மந்திரங்கள் முழங்க இன்னிசை மேளத்துடன் மணமக்களுக்கு திருமணம் நடைபெற்றது. இதில் 2 கிராம் தங்கத்துடன் பாத்திரம், டம்ளர் , மிக்ஸி உள்பட 30 வகையான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து கோவிலுக்கு வந்தவர்களுக்கு திருமண விருந்து கொடுக்கப்பட்டது.