உலிக்கல் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு இலவச குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம்
- தூய்மை பணியாளர்களுக்கு நினைவு பரிசு
- மின்வாரிய ஊழியர்களும் கவுரவிப்பு
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் உலிகல்அரசு உயர்நிலைப் பள்ளியில் நல் உள்ளம் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் உலிக்கல் சண்முகம் தலைமையில் முப்பெரும் விழா நடைபெற்றது.
அப்போது அங்கு குழந்தைகள் தின நிகழ்ச்சி, பள்ளிக்கு இலவச குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் வழங்குதல் மற்றும் சிறப்பாக சேவை செய்த மின்துறை மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தலைமை ஆசிரியர் சுப்பிரமணியம் வரவேற்றார். அமிர்தாஜ் பவுண்டேஷன் நிறுவனர் அமிர்தராஜ் கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர் ஆதிவாசி கிரா மப்பகுதிகளில் சிறப் பாக சேவை செய்த மின்துறை ஊழியர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து உலிகல் பேரூராட்சிக்கு உட்பட்ட தூய்மை பணியாளர்கள் மற்றும் வளம் மீட்பு பூங்கா ஊழியர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மின்வாரிய செயற்பொறியாளர் சேகர், உலிக்கல்பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமரன், நீலகிரி விடியல் அறக் கட்டளை தலைவர் லாரன்ஸ்,சோசியல் மீடியா தலைவர் சிக்கந்தர், மனிதனை நேசிப்போம் பாரூக் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அப்துல் கலாம் நினைவு அறக்கட்டளை நிறுவன தலைவர் சாதிக் சேனா நன்றி கூறினார்.